நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் படிக்கலாம்.
தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.
பிபிசி தமிழின் இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் படிக்கலாம்.

பட மூலாதாரம், af
பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வேளையில் நாடு முழுவதும் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத் துறை வேட்டையாடி வருகிறது.
பல்வேறு பகுதிகளிலும் தினந்தோறும் நடத்தப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது நூற்றுக்கணக்கானோர் கைதாகின்றனர்.
இதற்கிடையே மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ள குடியேறிகள் அவரவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்தோனீசியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் வரும் ஜூன் 6ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
மொத்தம் 2,861 குடியேறிகள் அனுப்பப்படுவர் என்றும், 6ஆம் தேதி அன்று முதற்கட்டமாக 450 குடியேறிகள் இந்தோனீசியா திரும்புவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நேப்பாள நாட்டைச் சேர்ந்த 246 சட்டவிரோத குடியேறிகளையும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 2,476 பேரையும் திருப்பி அனுப்ப சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பட மூலாதாரம், AFP
சீனாவில் சர்வதேச பெரு நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மனியில் இருந்து 400க்கும் மேற்பட்ட மேலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனி விமானம் மூலம் சீனா திரும்பியுள்ளனர்.
சீனாவில் 5,200க்கும் மேற்பட்ட ஜெர்மன் நிறுவனங்கள் இயங்குகின்றன. அங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள்.
’’வெளிநாட்டு பணியாளர்களை மீண்டும் சீனா அழைத்து வர ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன’’ என்கிறார் ட சீனாவில் உள்ள ஜெர்மன் வர்த்தக சபையின் நிர்வாக இயக்குனர் ஜென்ஸ் ஹில்டெபிராண்ட்.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 506 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,337 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,622 என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நோய்த்தொற்றுப் பரவல் முடிவுக்கு வரும் பட்சத்தில், அதையடுத்து வரும் காலங்களில் சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் காணொளி மூலம் பேசிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, கொரோனா வைரஸ் தொற்று முறியடிக்கப்பட்ட பிறகு நாட்டின் பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக்கூடும் என்று தெரிவித்தார்.
நாடு எதிர்கொள்ள இருக்கும் இருண்ட சூழ்நிலையின் போது அரசுத் தரப்பில் அதிகமான வேலைப் பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், நிரந்தர வேலை கிடைப்பதற்கு முன் இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் பலரும் நல்ல அனுபவங்களைப் பெறலாம் என்றார்.
சிங்கப்பூரில் அடுத்த கட்டமாக வேலை வாய்ப்புகளைக் காட்டிலும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இப்படியொரு சூழ்நிலை உருவாகும் என்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,928 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465,166 ஆக அதிகரித்துள்ளது.
தென் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ள பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,124 பேர் இறந்துள்ளனர். இங்கு 27,878 பேர் இறந்துள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயினை முந்தியுள்ளது பிரேசில்.
அதிகளவிலான கொரோனா பரிசோதனைகள் செய்யப்படாததால், பாதிப்பு இப்போது இருப்பதை விட 15 மடங்கு அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 938 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் ஆறு நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று இறந்த ஆறு நபர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். 37 வயதான நபருக்கு மூச்சுதிணறல், கோவிட் நிமோனியா இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னை நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவந்தனர்.இன்று பாதிப்புக்கு உள்ளான 938 நபர்களில் 82 நபர்கள் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர், டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த நபர்கள் சோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியானதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இன்று ஒரே நாளில் 616 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு, தமிழக அரசுக்கு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த பரிந்துரை வழங்கிய மருத்துவக்குழுவினர், அதிக பாதிப்புள்ள இந்த நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்கு தேவை என்றனர்.தமிழகத்தில் செயல்படும் 72 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 4,79,233 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 12,039 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 687 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,000ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட 6,513 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மையங்களில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 616 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.
உலக சுகாதார நிறுவனத்துடனான அமெரிக்காவின் உறவை துண்டிப்பதாக அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரும் நிதியை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என பிரிட்டன் அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் உலக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதை தடுப்பதற்கு முக்கிய முன்னெடுப்புகளை உலக சுகாதார நிறுவனம் எடுத்து வருகிறது என பிரிட்டனின் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நேற்று வரை 57 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவற்றில் 35 பேர் சிகிச்சை பெற்று வந்தனர், இவர்களில் 2 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் கர்ப்பிணிப் பெண், வங்கி ஊழியர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
"இதுவரை 7 ஆயிரத்து 43 பேருக்குப் பரிசோதனை நடத்தி உள்ளோம். அதில் 68 பேருக்குச் சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. நாளை முதல் ஊரடங்கு தளர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து உள்ளோம். '' என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்.’’ மேலும் வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும், மாஹே பகுதியில் மழைக்காலம் வர இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளோம்.''என்றார்.
டெல்லியிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த விமானம் பாதி வழியிலே மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது என பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை நாட்டுக்கு அழைத்தவர சென்ற இந்த விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு மேலே பறந்துகொண்டிருக்கும்போது, விமானிக்குத் தொற்று இருப்பதை ஊழியர்கள் அறிந்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பிய இந்த விமானம், மதியம் 12.30 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்பியது.
விமானத்தில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாஸ்கோவில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர மற்றொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தவறு குறித்த விசாரணைக்கு சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை செவிலியர் பிரிசில்லா கடந்த 27-ம் தேதி உயிரிழந்தார்.
இந்தநிலையில் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters
ஜூன் மாத பிற்பகுதியில் நடக்க உள்ள G7 உச்சி மாநாட்டில் ஜெர்மன் சான்சிலர் ஏங்கலா மெர்கல் கலந்துகொள்ள மாட்டார் என அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உச்சி மாநாட்டை ஆன்லைனில் நடத்த இந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், வெள்ளை மாளிகைக்குத் தலைவர்களை நேரடியாக அழைத்து உச்சிமாநாட்டை நடத்த உள்ளதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
’’ இப்போது உள்ள கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சான்சிலர் ஏங்கலா மெர்கல் வாஷிங்டன் சென்று மாநாட்டில் கலந்துகொள்ள இயலாது’’ என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
உலகிலே அமெரிக்காவில் அதிகபட்ச கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. அங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
"கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுர ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கவனம் தேவை. சென்னையில் தற்போது பேருந்து, ரயில் சேவையை தொடங்குவது, வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது போன்றவற்றால் பாதிப்பு அதிகரிக்கும்."
"நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தொடரவேண்டுமே தவிர தளர்வுகள் அளிக்கக்கூடாது. மாவட்ட வாரியாக தளர்வுகளை அறிவிக்கலாம். மாநிலம் முழுவதும் மொத்தமாக அறிவிக்க முடியாது," என்று தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிருபணர் குழுவில் உள்ள மருத்துவர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நான்காம் கட்ட முடக்க நிலை அறிவித்த பிறகு நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அச்சங்கள் முதலிலேயே இருந்ததுதான்.
ஆனால் அதிக அளவில் தொற்றுநோய் பாதிப்புகளைக் கொண்டுள்ள ஐந்து மாநிலங்களின் நிலவரம் மத்திய அரசின் கவலையை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம், முடக்க நிலையின் அடுத்த கட்டத்தில், அந்த ஐந்து மாநிலங்களிலும் குறிப்பாக அதிக கவனம் செலுத்தும்.
உலக சுகாதார நிறுவனத்துடனான அமெரிக்காவின் உறவை துண்டிப்பதாக அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு ’’ஏமாற்றம்’’ அளிப்பதாகவும், உலக சுகாதாரத்திற்கு இது பின்னடைவு என்றும் ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக சுகாதார அமைப்பால் எதிர்காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிவும் என்றும், ஆனால் அந்த அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு