ரூ. 23 லட்சம் கோடி எங்கே? மோதி அரசுக்கு ராகுல் முன்வைக்கும் கேள்விகள்

மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியேறியபோது, சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 410 ஆக இருந்தது. இன்று அது 116 சதவீதம் உயர்ந்து ரூ. 885 ஆகியிருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. காபூல் விமான நிலையத்தை மீண்டும் இயக்க பேச்சுவார்த்தை

    ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்க படைகள் வெளியேறி இன்றுடன் இரு நாட்கள் ஆன நிலையில், காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என ஃபிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    விமான நிலையத்தை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து தாலிபன்கள் கத்தார் மற்றும் துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன் கூட்டிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவின் விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய விமான சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க படைகள் நாட்டைவிட்டு வெளியேறிய ஒருசில மணிநேரங்கள் தாலிபன்கள் காபூல் விமான நிலையத்தில் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  3. ஆஸ்திரேலியா செல்ல ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி

    cricket

    ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு முதன்முறையாக அந்நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணி சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான அனுமதியை தாலிபன்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    “ஆப்கானிஸ்தானின் ஆண்கள் கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக” ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முக்கிய நிர்வாகியான ஹமீத் ஷிவாரி ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்து பின் பெருதொற்றால் தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் தெரிவித்திருந்தது. இந்த போட்டிகள் தற்போது நவம்பர் மாதம் பிற்பகுதியில் நடைபெறும்.

    1990களில் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் ஆண்டபோது பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கிரிக்கெட் போட்டிகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  4. பெட்ரோலிய பொருட்கள் மூலம் 7 ஆண்டுகளில் ஈட்டிய ரூ. 23 லட்சம் கோடி எங்கே? ராகுல் காந்தி கேள்வி

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் ரூ. 23 லட்சம் கோடி அளவுக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் வருவாய் ஈட்டியுள்ள மோதி அரசு, அவற்றை குறைக்காமல் விலையேற்றத்திலேயே கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் விற்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வருவாய் தொடர்பாக தாம் மதிப்பிட்ட தரவுகளை அவர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது வெளியிட்டார்.

    இந்த விலையேற்றத்தின் மூலம் ஈட்டிய வருவாய், மற்றும் சரக்கு, சேவை வரிகள் மூலம் கிடைத்த தொகை அனைத்துமே மோதி அரசின் முதலாளித்துவ நண்பர்களுக்கே பலன்களை கொடுக்கின்றன என்று ராகுல் கூறினார்.

    இந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி உயர்ந்து வருவதை போலவே சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோலிய பொருட்களின் விலையும் உயர்வதாக ராகுல் குறிப்பிட்டார்.

    மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியேறியபோது, சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 410 ஆக இருந்தது. இன்று அது 116 சதவீதம் உயர்ந்து ரூ. 885 ஆகியிருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

    டீசல் விலை லிட்டருக்கு 55 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை இன்று மக்கள் மீண்டும் வைக்க இந்த விலையேற்றம் தூண்டியிருக்கிறது.

    2014ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்தபோது கூட இந்தியாவில் அவற்றின் விலை குறைவாகவே இருந்தது என்று ராகுல் கூறினார்.

    தற்போதைய நிலையை பார்க்கும்போது நாட்டின் பொருளாதாரம் 1990ல் இருந்த நிலை போல ஆகி விட்டது என்றும் அவர் சாடினார்.

    அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாற்றத்துக்கான பார்வை இருந்தது. ஆனால், இப்போது அப்படி நடக்காது. 1991 முதல் 2012ஆம் ஆண்டுவரை நாடு கொண்டிருந்த பொருளாதார கட்டமைப்பும் உத்தியும் இனி வேலை செய்யப்போவதில்லை. எல்லா நேரமும் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று முழங்கும் பிரதமர் நரேந்திர மோதி, என்ன மாற்றத்தை செய்தார் எனத் தெரியவில்லை.

    இந்த அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படப்போவது இளம் தலைமுறையின் எதிர்காலம்தான். அதனால்தான் இந்த கேள்விகளை அவர்களிடமே வைக்கிறேன். இந்த அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிகள், வேளாண் சட்டங்கள், விலையேற்றத்தால் இளம் தலைமுறைக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

    பிறகு எதற்காக இந்த நடவடிக்கைகள்? இது பற்றி எல்லாம் இளம் தலைமுறை சிந்திக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

    பாஜக பதில்

    இந்த நிலையில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கு தவறான விளக்கத்தைக் கொடுத்து மக்களை குழப்ப ராகுல் காந்தி முயன்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று கடுமையாக நிலவிய காலகட்டத்தில் நமது ஜிடிபி வளர்ச்சியின் முதல் காலாண்டு முடிவுகள் அற்புதமானவை. இது மோதியன் தலைமையால் தான் சாத்தியமாகியிருக்கிறது என்றார் சம்பித் பாத்ரா.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  5. தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

    தாலிபன்கள் எப்படி பணம் சம்பாதித்தனர்? எந்தெந்த வழிகளில் செல்வம் சேர்த்தனர்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் - விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?

    பள்ளி மாணவி

    இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, மேகாலயா, திரிபுரா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இன்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரில் வருகை தந்தனர்.

    இதையொட்டி பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்புகளில் பங்கேற்க தாமாக முன்வந்து ஒப்புகை வழங்குகிறோம் என பெற்றோர் படிவத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

  7. அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை

    காடுகள்

    உலகின் 30 சதவிகித காட்டு மர இனங்கள் அழிவை எதிர்கொண்டிருப்பதாக புதிய ஆய்வு மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

    மக்களால் நன்கு அறியப்பட்ட ஓக் மரங்கள் முதல் வெப்பமண்டல மரங்கள் வரை அழிந்து போகும் இனங்கள் பட்டியலில் உள்ளன.

    ஒட்டுமொத்தக் கணக்கீட்டின்படி 17,500 மர இனங்கள் ஆபத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பில் உள்ள பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும்.

    காடழிப்பு, மரம் வெட்டுதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்க வேண்டும் என சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

  8. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி, நடராஜன் சுந்தர், புதுச்சேரி

    புதுச்சேரி
    படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்று சட்டபேரவையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி சட்டபேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கியது.

    அதில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.9,924 கோடிக்கு வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதன் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று முதல்வர் ரங்கசாமி பேசினார். அப்போது அவர் சில புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் விவரம்:

    • புதுச்சேரி பட்ஜெட்டில் கூடுதலாக 1.5 சதவீதம் நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால் கடந்த மே மாதம்தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். அதனால் உடனடியாக கூடுதல் நிதி தரவில்லை. இருப்பினும் மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பிரதமரிடம் கூடுதலாக ரூ.500 கோடி நிதி கேட்டுள்ளோம். இதை மீண்டும் வலியுறுத்தி பெறுவோம். அதிக நிதி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசும் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.
    • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என்று கூறித்தான் கட்சியைத் தொடங்கினோம். எப்போதும் மாநில அந்தஸ்தை கேட்போம். நீண்ட நாட்களாக முதல்வராக இருந்த எனக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் அரசை நடத்துவது எத்தனை கஷ்டம் என்பது தெரியும். இதுதொடர்பாக பிரதமரிடம் ஏற்கெனவே பேசியுள்ளேன்.
    • இந்த கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
    • விவசாயிகளுக்கு பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்கள் எவ்வளவு உறுதுணையாக இருந்தது? என இப்போதுதான் தெரிகிறது. விவசாயிகள் இடுபொருட்கள், உபகரணங்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
    • 33 மதுபான கடைகள், 5 பெட்ரோல் பங்குகள் இருந்தும் எப்படி நலிவடைந்தது? எனத் தெரியவில்லை. மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்து அந்த நிறுவனங்களை இயங்கச் செய்வோம்,
    • விற்கப்பட்ட வீட்டு மனைகள், பிரிக்கப்பட்ட வீட்டு மனைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தியாகிகள் ஓய்வூதியம் தற்போது ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
    • பாட்கோவில் கல்விக்கடனை தள்ளுபடி செய்துள்ளோம். பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் பெற்ற கல்விக்கடனும் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
    • அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
    • நடப்பு நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்கட்டமாக 1 கோடியும், அடுத்தகட்டமாக 1 கோடி ரூபாய் என மொத்த 2 கோடி ரூபாய் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி வழங்கப்படும்.
    • தாழ்த்தப்பட்டோர் வீடு கட்ட இப்போது ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதை ரூ.5.50 லட்சமாக உயர்த்தப்படும்.
    • தாழ்த்தப்பட்ட முதியோர் பெறும் ஓய்வூதிய தொகையை ரூ.500 உயர்த்தப்படும்.
    • தாழ்த்தப்பட்டோர் இறுதிச்சடங்கு செலவுக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
    • அம்பேத்கர் மணிமண்டபத்தின் பின்புறம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் அமைக்கப்படும்.
    • சென்டாக்(அரசு சார்பு உயர்கல்வி மையம்) மூலம் தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும்.
    • தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியம் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
    • அரசு துறைகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 10 ஆயிரம் வழங்கப்படும்.
    • புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படும்.
    • பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை 20 ஆயிரமாக வழங்கப்படும்.
  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, “ஓரிரு நாட்களில் புதிய அரசாங்கம் குறித்த அறிவிப்பு” - தாலிபன்கள்

    தாலிபன்

    தாலிபனின் புதிய அரசு குறித்த அறிவுப்புகள் ஓரிரு நாட்களில் வரும் என தாலிபன் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    கத்தாரில் உள்ள தாலிபனின் அரசியல் அலுவலகத்தின் துணை தலைவர், ஷெர் அபாஸ் ஸ்டானெக்சாய், கடந்த 20 வருடங்களில் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் யாரும் புதிய அரசில் இருக்க மாட்டார்கள் என பிபிசியின் பாஷ்டோ சேவையிடம் தெரிவித்துள்ளார்.

    புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கு இடம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் அமைச்சர் போன்ற உயரிய பொறுப்புகள் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

    புதிய அரசு அமைக்கும் முயற்சிகளில் தாலிபன்கள் ஈடுபட்டு வரும் வேளையில் பலர் தங்கள் எதிர்கால குறித்த அச்சத்தில் உள்ளனர்.

    குறிப்பாக பெண்கள் மற்றும் ஒருபாலின சமூகத்தினர் தாலிபன்கள் ஆட்சி குறித்த அச்சத்தில் உள்ளனர். அதில் பலர் நாட்டைவிட்டு தப்பித்தும் வருகின்றனர்.

    தாலிபன்கள் பெண்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தாலும், அவர்களின் செயல் வேறொன்றாகவே இருக்கும் என பலரும் கருதுகின்றனர் எனவே பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களின் அடிப்படை உரிமை பறிபோகும் என்ற பெரும் அச்சத்தில் உள்ளனர்.

  10. ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா தப்பிவந்த பெண்ணின் திகிலான அனுபவம்

    காபூலில் இருந்து இந்தியா தப்பி வந்த பெண்ணின் திகிலான அனுபவங்களை பிபிசி செய்தியாளர் நேஹா ஷர்மாவிடம் பகிர்ந்து கொண்டார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. டெல்லியில் 11 ஆண்டுகளில் இல்லாத கன மழை: தாழ்வான சாலைகளில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கன மழையால் பல இடங்களில் தாழ்வான சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

    இதனால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நரேத்தில் 112.1 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

    இதற்கு முன்பு ஒரே நாளில் இந்த அளவு மழை 2010ஆம் ஆண்டு செப்ாடம்பர் 20ஆம் தேதி பெய்தது. அப்போது மழை நீர் 110மி.மீ அளவுக்கு பதிவானதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    டெல்லியில் நேற்று முதல் விட்டு பெய்து வந்த மழை, இன்று காலையில் இடைவிடாது பொழிந்தது. இந்த மழை டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியில் தொடரும் என்றும் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  12. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா வேட்பு மனு ஏற்பு

    தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாக இருக்கும் மூன்று இடங்களில் ஒரு இடத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். இதையடுத்து அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அந்த இடத்துக்கான தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டு, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆக இருந்தது. இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனா இன்று நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லாவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்ற மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 3 என்பதால், அன்றைய தினம் அப்துல்லாவை எதிர்த்து யாரும் போட்டியிடாதது முறைப்படி உறுதிப்படுத்தப்படும். இதையடுத்து அவர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  13. ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு - மு.க. ஸ்டாலின், சசிகலா நேரில் ஆறுதல்

    சசிகலா ஓ.பன்னீர்செல்வம்

    தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மரணம் தொடர்பான தகவல் சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அதிமுகவினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அக்கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

    இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நண்பகலுக்குப் பிறகு விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சசிகலா வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் சசிகலாவுக்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில், இன்று பகல் 12.30 மணியளவில் சசிகலா ஓ.பன்னீர்செல்வத்தை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையில் சசிகலா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    ஸ்டாலின்
    படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
  14. த.நா குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய பெயர்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

    ஸ்டாலின்
    படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

  15. ஆப்கன் எல்லை பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கவலை

    ஆப்கானிஸ்தான் தாலிபன் பாகிஸ்தான்

    ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு தாலிபன்கள் அங்கு புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், அந்த நாட்டின் பாதுகாப்பு குறித்து அதன் அண்டை நாடான பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.

    குறிப்பாக தாலிபன் போராளிகள் மீதே பாகிஸ்தான் தனது கவலையை வெளியிட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானைக் கடந்து வந்து தங்களுடைய எல்லை பகுதியில் யார் கொடிய தாக்குதல்களை நடத்துவார்கள் என்ற அச்சம் அந்த நாட்டை குடிகொண்டிருக்கிறது.

    கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜிஹாதிகளின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    காபூல் விமான நிலையம் அருகே சமீபத்தில் நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலுக்குப் பிறகு அந்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.

    100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட அந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு பொறுப்பேற்றுள்ளது. இதில் சுமார் 13 அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய எல்லைத் தாக்குதலில் தங்களின் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    எனவே, அடுத்த இரண்டு-மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது என்றும் பாகிஸ்தான் மூத்தஅதிகாரியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  16. பிரிட்டிஷ் அரசுக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை: பிரிட்டன் உள்துறை

    பிரிட்டன் அரசு

    ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்க வசிப்பிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானியர்கள் மறுவாழ்வு மற்றும் ஆதரவுக் கொள்கை திட்டத்தின்படி கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் இதுநாள்வரை அந்த நாட்டில் இருந்து எட்டாயிரத்துக்கும் அதிகமானோரை பிரிட்டன் அரசு மீட்டுள்ளது.

    அங்கு மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் துருப்புகள் கடந்த வாரம் முழுமையாக வெளியேறின. அத்துடன் அந்த நாட்டில் இருந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த பிரிட்டன் படையின் இருப்பும் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள், தங்களுடைய அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியிருந்தால் அவர்கள் தொடர்ந்து பிரிட்டனிலேயே வசிக்கலாம்என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

    அத்தகைய நபர்கள் எத்தனை பேர் எந்ற விவரம் தற்போதைக்கு தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

    ஆபரேஷன் 'வார்ம் வெல்கம்' என்ற பெயரில் இந்த புனர்வாழ்வுத் திட்டத்துக்கு பிரிட்டன் அரசு பெயரிட்டிருக்கிறது. பிரிட்டனில் தஞ்சம் அடைந்த ஆப்கானியர்களுக்கு புதிய வாழ்வு அமைவதை உறுதிப்படுத்தப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி காலமானார், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    பன்னீர்செல்வம்
    படக்குறிப்பு, தமிழக முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு விழாவில் முதல் முறையாக தமது மனைவி விஜயலட்சுமியுடன் மேடையில் பங்கெடுத்த ஓ.பன்னீர்செல்வம்.

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

    அ.இ.அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு இன்று காலையில் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.

    ஓ. பன்னீர்செல்வம் - விஜயலட்சுமி தம்பதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ப. ரவீந்திரநாத் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

    இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் விஜயலட்சுமி உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனடியாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டு சென்றனர்.

  18. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதில் தவறில்லை: பைடன்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு சரியானதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வைத்திருப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பிறகு நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து 1.2 லட்சம் பேரை விமானம் மூலம் மீட்ட படையினரை அவர் பாராட்டினார். இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிகழ்வை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர்.

    2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் போரைத் தொடங்கின. தாலிபன்களின் ஆட்சி அகற்றப்பட்டது.

    ஆயினும் 20 ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் படைகளை விலக்கிக் கொண்ட பைடனின் முடிவு உள்நாட்டிலும் நட்பு நாடுகள் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. படைகளை விலக்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதும் தாலிபன்கள் மிக வேகமாக முன்னேறி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

  19. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்

    வணக்கம் நேயர்களே, பிபிசி தமிழ் இணையதளத்தின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். உலக நாடுகள் மற்றும் இந்திய அளவிலான முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் வழங்குகிறோம். தகவல்களை உடனுக்குடன் அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.