"இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களை செய்கிறது"
பிரசுரிக்கப்பட்டது
வவுனியாவைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் எனும் இளைஞர் மகர சிறைச்சாலையில் பலியான பிறகு, அவரது உடலை வவுனியாவுக்கு கொண்டு சென்று இறுதி கிரியைகளைச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடலை வவுனியா எடுத்துச் சென்றால், அங்கு பிரச்சினைகள் ஏற்படும் என்று காவல்துறையினர் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
இறந்த ஒருவரின் உடலை அவர்களது உறவினர்களிடம் கையளிக்க மறுப்பதும், விருப்பத்துக்கு மாறான வகையில் அடக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வது மிகக் கடுமையான மனித உரிமை மீறல் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.