குவைத்தில் இருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டுத் தொழிலாளிகள்
பிரசுரிக்கப்பட்டது

குவைத்தில் முறையான அனுமதி ஆவணங்கள் இன்றி வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிரடி சோதனைகள் நடத்திப் பிடித்து சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவருவதாகவும், இதனால் அந்த நாட்டில் பெரும் எண்ணிக்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்குள்ளாவதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஓரிரு மாத இடைவெளியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திருப்பி அனுப்ப்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அங்கு தற்போது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து குவைத்தில் வாழும் தமிழரும் குவைத் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் ஊடகச் செயலாளருமான முகமது ஆரிஃப் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.