விரிவடையும் ஜப்பானின் ''ஸ்கூபி'' தீவு
பிரசுரிக்கப்பட்டது
பசுபிக் கடலில் புதிதாக உருவான பூகம்பத் தீவு வேகமாக விரிவடைந்து வருவதாக ஜப்பானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஜப்பானின் கடற்பிராந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்தின் அளவு விரிவடையும்.
சக்தி மிக்க கடற்கீழ் அரிப்பால் உருவான அந்தத் தீவு, கடந்த நவம்பரில் அது முதலில் தோன்றியபோது இருந்ததை விட 30 மடங்கு பெரிதாக உள்ளது.
ஒரு கோணத்தில் பார்த்தால் பிரபல கார்ட்டூன் பாத்திரமான ''ஸ்கூபி'' போன்று தென்படுவதால், அதன் பெயரையே இணையப் பயன்பாட்டாளர்கள் அதற்கு சூட்டியுள்ளனர்.
ஆனால், தீவு தொடர்ந்து வளர்ந்தால், தோற்றம் அப்படியே இருக்காது.