'மலையக வீடமைப்புக்கு நிதி ஒதுக்காதுள்ளமை அரசின் பாரபட்சம்'

பிரசுரிக்கப்பட்டது

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மலையக தொழிலாளர்களுக்கான வீடமைப்புக்கு அரச திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்காதுள்ளமை தமிழர்கள் மீதான அரசின் பாரபட்சத்தையே காட்டுவதாக மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மலையக மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தனியான அமைச்சொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோருகின்றார்.

திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்காமல் கால்நடை அபிவிருத்தி அமைச்சிடமிருந்து வீடமைப்புக்கு நிதி எதிர்பார்ப்பதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடிதம் கிடைத்துள்ளமை தொடர்பில் மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அளித்த செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.