பிரிட்டனின் முதலாவது அரச- இந்து உயர்நிலைப் பள்ளி

பிரசுரிக்கப்பட்டது
அவந்தி ஹவுஸ் ஆரம்பநிலை பள்ளிக்கூடம்
படக்குறிப்பு, அவந்தி ஹவுஸ் ஆரம்பநிலை பள்ளிக்கூடம்

பிரிட்டனில் அரச நிதியில் இயங்கவுள்ள முதலாவது இந்து உயர்நிலைப் பள்ளிக்கூடத்தை அமைப்பதற்கு லண்டனிலுள்ள ஹரோ கவுன்சில் உள்ளூராட்சி நிர்வாகம் நிலம் வழங்க முன்வந்துள்ளது.

ஏற்கனவே கிருஷ்ணா அவந்தி இல்லம் என்ற இந்து ஆரம்பநிலை பள்ளியொன்றை நடத்திவரும் நிர்வாகமே இந்த புதிய உயர்நிலை பள்ளியை முன்னெடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

அடுத்ததாக பள்ளிக்கூடத்துக்கு கட்டுமான திட்ட அனுமதி கிடைக்க வேண்டியுள்ளது.

அனுமதி கிடைத்தால் அடுத்த ஆண்டு செப்டெம்பரிலிருந்து பிரிட்டனின் முதலாவது இந்து உயர்நிலைப் பள்ளிக்கூடம் இயங்கத் தொடங்கிவிடும்.

இது பற்றிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.