நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றி தினம் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

யுக்ரெய்னில் இருந்து க்ரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்த பிறகு, அங்கு முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டீன் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை குறிக்கும் வகையில், ஸ்வாஸ்டபோல் துறைமுகத்தில் ஒரு இறங்கு துறையில் நின்று பூட்டீன் அவர்கள், ரஷ்யாவின் கருங்கடல் கப்பற் படையினருக்கு உரையாற்றினார்.

பின்னர் அங்கு காத்திருந்த மக்களுக்கு உரையாற்றுவதற்காக கரைக்கு அவர் வந்தார்.

ரஷ்யாவுடன் இணைவதற்கான முக்கிய முடிவை க்ரைமிய மக்கள் எடுத்த வருடமாக 2014 நினைவுகூரப்படும் என்று அவர் கூறினார்.

க்ரைமியாவுக்கான பூட்டீனின் விஜயத்தை கண்டித்த யுக்ரெய்னின் வெளியுறவு அமைச்சு, ரஷ்யா வேண்டுமென்றே பிரச்சினையை அதிகரிக்கச் செய்கிறது என்று கூறியுள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் செஞ்சதுக்கத்திலும் ஏனைய இடங்களிலும், இந்த வெற்றி தினத்தை முன்னிட்டு பல அணிவகுப்புக்கள் நடந்தன.

அவை குறித்த காணொளியை இங்கு காணலாம்.