இடையூறு செய்தவரை கிண்டலடித்த ஒபாமா

பிரசுரிக்கப்பட்டது

கலிஃபோர்னியாவில் ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவில் நடந்த நிதி திரட்டும் கூட்டத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றியபோது, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர் ஒருவர் கூச்சலிட்டு ஒபாமாவின் பேச்சைக் குழப்பினார்.

“எத்தியோப்பியாவுக்கு விடுதலை வேண்டும்” என்று அந்நபர் திரும்பத் திரும்ப கத்தினார்.

தனது உரையை நிறைவு செய்யும் தறுவாயில் இருந்த அதிபர் ஒபாமா, "என் பேச்சோட நிறைவை ஒரு விதமா கெடுத்துப்போட்டுட்டீங்க! பரவாயில்லை! இது பேச்சு சுதந்திரத்தை மதிக்கிற நாடு" என சிரித்துக்கொண்டே கூறி, அந்த சங்கடமான சூழலை நகைச்சுவையுடனும் சாதுர்யத்துடனும் கையாண்டு கூட்டத்தில் இருந்தவர்களிடம் இருந்து கைதட்டல் வாங்கினார்..

குறிப்பு: இந்த காணொளியில் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை.