காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
சாண்டியோகோவுக்கு அருகே கார்ள்ஸ்பாட் நகரில் ஏற்கனவே பல வீடுகளை நிர்மூலமாக்கிய காட்டுத் தீயில் இருந்து தப்புவதற்காக கலிபோர்னியாவில், ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
மாநிலத்தின் தென்பகுதியில் பெரும் அனல்காற்று வீசுகிறது.
கடுமையான வெப்பம், உலர்வு மற்றும் கடுமையான காற்று ஆகியவை காரணமாக தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்கள்.
இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற காணொளி.