தாய்லாந்து போராட்டங்கள் தொடர்கின்றன - காணொளி
தாய்லாந்தில் இரு நாட்களாக இராணுவ ஆட்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் யிங்லக் சினவத்ரா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறுவதாயின், அதற்கு அரசாங்க அனுமதியை பெற வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், இராணுவ ஆட்சிக் கவுன்ஸிலுடன் தொடர்புடைய வட்டாரம் ஒன்று பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
வியாழனன்று இராணுவ புரட்சியை அடுத்து தடுத்து வைக்கப்பட்ட சுமார் 150 அரசியல்வாதிகள், கல்விமான்கள், மற்றும் இராணுவ புரட்சியின் விமர்சகர்களில் இவரும் ஒருவர்.
பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இராணுவ ஆட்சிக்கு எதிரான, சிறிய ஆனால், ஆத்திரத்துடனான ஆர்ப்பாட்டங்கள், மூன்றாவது நாளாக பாங்காக் எங்கிலும் நடந்துள்ளது.
இழுபறிகளும் கைதுகளும் நடந்தாலும், பாதுகாப்புப் படையினருடம் மோசமான மோதல்கள் நடக்கவில்லை.
இவை குறித்த ஒலிக் குறிப்பற்ற காணொளி.