ஜனவரியில் இலங்கை வருகிறேன் -போப் பிரான்சிஸ் ( காணொளி)

பிரசுரிக்கப்பட்டது

ஆசிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக இன்று அறிவித்தார் போப் பிரான்ஸிஸ்.

"ஆசியாவைப் பொறுத்தவரை, இரண்டு பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். தென்கொரியாவில் இளம் ஆசியர்களை சந்திக்கவும், பிறகு, அடுத்த ஜனவரியில் இலன்க்கைக்கும் பிறகு பிலிப்பைன்ஸுக்கும் செல்லவிருக்கிறேன்"

ஜெருசலேத்திலிருந்து ரோம் திரும்பிய போப் ,செய்தியாளர்களிடம் பேசியபோது, அடுத்த மாதம் இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன தலைவர்களுடன் சந்திக்கவிருக்கிறேன். இந்த சந்திப்பு அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான சந்திப்பல்ல , அவர்கள் ஒன்றாக பிரார்த்தனை செய்யத்தான் வருகிறார்கள் என்றார்.