சவுதியின் ஷியா சமூகக் கிளர்ச்சி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
சவுதி அரேபியாவின் ரகசியக் கிளர்ச்சி என்று இது அழைக்கப்படுகின்றது.
சவுதியின் கிழக்கு மாகாணத்தில் ஷியா சிறுபான்மையினரால் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற போராட்டங்கள், பெரிதாக வெளியாருக்கு தெரியவருவதில்லை.
உலகின் பெரிய பெட்ரோலிய வலயத்தில் இந்தப் பிராந்தியம் அமைந்துள்ளது.
பிபிசியின் ''எமது உலகம்'' என்ற தொடருக்காக நடத்தப்பட்ட ஒரு புலனாய்வின் போது சவுதியின் செய்தியாளரான சஃபா அல் அஹ்மட் அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தப் பகுதியில் படம் பிடிக்க வழி கிடைத்திருந்தது.
அரசாங்கத்தின் வன்முறையுடனான அடக்கு முறைக்கு எதிராக ஷியா சமூகம் எவ்வாறு பதிலடி கொடுக்கிறது என்று அவர் ஆராய்கிறார்.
இவை குறித்த காணொளி.