அவுஷ்விட்ஸ் முகாமின் கணக்காளர் விசாரணையில்

பிரசுரிக்கப்பட்டது

அவுஷ்விட்ஸ் வதை முகாமில் பல லட்சக்கணக்கான யூதர்கள் இரண்டாம் உலகப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த முகாமின் நாஜி பாதுகாவலர் ஒருவர் ஜெர்மனியில் விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறார்.

ஆஸ்கார் குரோனிங் என்ற இவர் தனக்கு இந்த சம்பவத்தில் தார்மீக பொறுப்பு இருந்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த முகாமில் சுமார் 3 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தானும் உடந்தை என்ற குற்றச்சாட்டின்பேரில் தண்டிக்கப்படவேண்டுமா என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுவதாக அவர் கூறினார்.

இப்போது 93 வயதான குரோனிங் அப்போது " அவுஷ்விட்ஸ் முகாமின் கணக்காளர்" என்று அறியப்பட்டார் ; ஏனென்றால் அவரது வேலை, முகாமுக்குப் புதிதாக வரும் பெரும்பாலும் யூதக் கைதிகளின் உடமைகளைக் கணக்கெடுப்பதுதான்.

இந்த யூதப் படுகொலையில் உயிர்தப்பியவர்களில் சிலர் கலந்து கொண்ட இந்த விசாரணையின் தொடக்கத்தில் அவர் மன்னிப்பு கோரினார். ஆனால் தனக்கு இந்த இனப் படுகொலையில் நேரடி தொடர்பு இல்லை என்றும் அவர் வாதிட்டார்.