இராக்: இசையே ஆயுதமாக...
பிரசுரிக்கப்பட்டது
''பாக்தாதின் செல்லோ கலைஞர்'' என்று அழைக்கப்படுபவர், கார் குண்டு வெடிப்பு ஒன்று நடந்த இடத்தில் தனது இசைக்கருவியை இசைத்தது, இராக்கிய தலைநகரில் இருக்கும் ஏனைய பல கலைஞர்களை ஈர்த்திருக்கிறது.
இராக்கிய தேசிய இசைக்குழுவின் முன்னாள் தலைவரான கரீம் வாஷிஃப் அவர்களின் இந்த தனி ஆவர்த்தனம், நிகழ் கலைகளை காட்சிப்படுத்துவதை தடை செய்துள்ள தீவிரவாதக் குழுவான, இஸ்லாமிய அரசுக்கு எதிரான ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.
அவரது இசை வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இவை குறித்த பிபிசியின் காணொளி.