"நீட்" தேர்வால் நிகழ்ந்த மரணம்
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து, மாணவி அனிதா கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் வழக்கு தொடுக்க டில்லி வந்திருந்தபோது பிபிசி தமிழுக்கு அளித்த ஃபேஸ்புக் நேரலையிலிருந்து ஒரு பகுதி காணொளி
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதாவின் தந்தை, காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார்.
சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் பங்கேற்பதற்காக உச்சநீதிமன்றத்திற்கு மாணவி அனிதா, வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அனிதாவின் தற்கொலை தமிழக மக்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
பிற செய்திகள் :
- நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை
- 'பர்ன் மீ அலைவ்': ட்விட்டரில் வைரலாகும் மோதி
- பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)
- ராட்சத விண்கல் ஃப்ளாரன்ஸ் பூமிக்கு அருகே வருகிறது
- அசல் ஓட்டுனர் உரிமம்: செவ்வாய்க்கிழமை வரை அமலுக்கு வராது என்கிறது தமிழக அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்