கொரோனா வைரஸ் அச்சம்: வௌவால்களை அழிப்பது எவ்வளவு ஆபத்து?

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ் அச்சம்: வௌவால்களை அழிப்பது எவ்வளவு ஆபத்து?
பிரசுரிக்கப்பட்டது

வெளவால்கள் மூலம் இந்த சார்ஸ்-கோவ்2 வைரஸ் பரவியுள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அது மனிதர்களுக்கு நேரடியாக பரப்பி இருந்திருக்காது. எறும்பு திண்ணி இடையில் கடத்தியாக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுகின்றன.

அதே நேரம் வௌவால்களை அழிப்பது எவ்வளவு ஆபத்து என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

சுற்றுச்சூழலை கட்டிக் காப்பதற்கு வெளவால்கள் பெரும் பங்காற்றுகின்றன. மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது, விதைகள் பரவ காரணமாகிறது, பூச்சியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உணவு, அழகு சாதனப் பொருட்கள், மேசை நாற்காலிகள், மருந்துகள் என அனைத்திற்கும் வெளவால்களின் பங்கு தேவை என்கிறார்கள் அவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: