குறைந்த விலையில் விதை விதைப்பு இயந்திரம்: பொறியியல் மாணவரின் முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
நேஷனல் பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பிரிவு மாணவர் ராஜ்குமார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாணவர் ராஜ்குமார் விவசாயிகளுக்கான விதை விதைப்பு மற்றும் உரம் தூவும் இயந்திரத்தை தயாரிக்க எண்ணி கல்லூரியின் என்.இ.சி. வணிக கருவகத்தை அணுகினார். இதையடுத்து என்.இ.சி. புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் ரூ.2.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த நிதயுதவியை வைத்து ராஜ்குமார் தானியங்கி விதை விதைப்பு இயந்திரத்தை தயாரித்துள்ளார்.
ஒளிப்பதிவு: பிரபு ராவ் ஆனந்தன் படத்தொகுப்பு: மதன்
பிற செய்திகள்:
- பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர
- பிரணாப் முகர்ஜி காலமானார் - 7 நாட்கள் துக்கம் அறிவிப்பு
- பிரசாந்த் பூஷண்: "ஒரு ரூபாய் அபராதம்" - இந்திய உச்ச நீதிமன்றம்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ’லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன ராணுவம்’
- இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?
- யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: