ஏலம் விடப்பட்ட 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடுகள்

காணொளிக் குறிப்பு, ஏலம் விடப்பட்ட 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடுகள்
பிரசுரிக்கப்பட்டது

டைரனோசோரஸ் ரெக்ஸ் டைனசோரின் எலும்புக்கூடுகள் 3 கோடியே 18 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

இந்த டைனசோரின் பெயர் 'ஸ்டான்'

நியூயார்க்கில் கிறிஸ்டீஸ் என்ற அமைப்பால் ஏலம் விடப்பட்ட இந்த 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளை, பெயர் வெளியிடாத நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

இதற்காக எதிர்பார்க்கப்பட்ட தொகை 6-8 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், ஆன்லைனில் ஏலம் விடப்பட்ட பின்னர், இதன் தொகை வேகமாக உயர்ந்தது.

1997ஆம் ஆண்டு "சூ" என்று பெயரிடப்பட்ட டி.ரெக்ஸ் டைனசோர் எலும்புக்கூடு 8.4 மில்லியன் டாலர்கள் என்ற விலையை விட தற்போது விற்கப்பட்டதன் விலை மிக அதிகமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: