அறுவைச் சிகிச்சை கூடத்தில் இசை கூடாது
பிரசுரிக்கப்பட்டது
அறுவைச்சிகிச்சை கூடங்களில் இசையை ஒலிக்கச் செய்தல் மருத்துவ பணியாளர்களுக்கு இடையூறாகவும், கவனச் சிதைவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறியுள்ளது.

பட மூலாதாரம், BBC Bangla
20 அறுவைச் சிகிச்சைகளை கண்காணித்த பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், சத்தத்துடனான இசை, பணியாளர்கள் தொடர்பு கொள்வதை கடினமாக்கியதுடன், அவர்களை பதற்றத்துக்கும் ஒருவித விரக்திக்கும் உள்ளாக்குவதாக கண்டறிந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஒரு மருத்துவ தாதி தனது பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி இசையின் சத்தத்தை குறைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.




























