'இசை கேட்டால் வலி குறையும்': அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு ஆலோசனை

பிரசுரிக்கப்பட்டது

அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் போது நோயாளிகள் இசையைக் கேட்பது நல்ல பலனைத் தரும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

அறுவை சிகிச்சையின் போதும், முடிந்த பின்னரும் இசையைக்கேட்கும் நோயாளிகள் வலியை குறைவாக உணர்வதாகவும் வேகமாக குணம் அடைவதாகவும் தெரியவருகிறது.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை வரும் நோயாளிகள் தமக்கு பிடித்த பாடல்களின் பட்டியலை கொண்டுவருவதை, மருத்துவமனைகள் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.