பிரம்மாண்டமான கடல் தேளின் படிமம் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது
460 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக வசித்த பிரம்மாண்டமான கடல் தேளின் படிமங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தேள் 2 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. ஒல்லியான உடலைக் கொண்ட அந்த ஜந்துவுக்கு, தலையைப் பாதுகாக்கக் கவசம் போன்ற அமைப்பும் இருந்தது. இரையைப் பிடிப்பதற்கு என நீண்ட கொடுக்குகளும் இருந்தன.
இந்த படிமம் வடகிழக்கு ஐயோவால் இருக்கும் பாறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கடல் தேள்களையெல்லாம்விட இந்தச் சிலந்தி பத்து மில்லியன் வருடங்கள் பழமையானது யேல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நண்டு, நட்டுவாக்காலி போன்ற உயிரினங்களை ஒத்ததாக இந்த உயிரினம் காணப்பட்டாலும், உண்மையில் இந்த கடல் தேள்கள், தற்கால சிலந்திகளின் மூதாதையர்களாகும்.




























