முதியவர்களைத் தாக்கும் இரண்டாம் ரக நீரிழிவால் அவதியுற்ற மூன்று வயது சிறுமி

பட மூலாதாரம், Thinkstock
இரண்டாம் ரக நீரிழிவு நோய் கண்ட மூன்றுவயது சிறுமி பற்றி அமெரிக்க மருத்துவர்கள் பரீசிலித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் சிறுவர் சிறுமியர் அதீத உடல் பருமனடைவது என்ற பிரச்ச்னை குறித்து புதிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்த சிறுமி, இந்த வயது வந்தவர்களுக்கு வரும் நீரிழிவு நோயால் பீடிக்கப்பட்ட மிக இளைய சிறார்களில் ஒருவர்.
இந்த இரண்டாம் ரக நீரிழிவு நோய், வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டது . மேலும் இது மத்திய வயது மற்றும் முதியோர்களையே பாதிக்கிறது.
பெற்றோர் அந்தக் குழந்தையை மருத்துவர்களிடம் எடுத்துச் சென்றபோது, அதன் எடை 35 கிலோவாக இருந்ததாம்.
உணவைக் குறைத்து, மேலதிக உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் அக்குழந்தையின் ரத்தத்தில் இருந்த சர்க்கரை அளவு ஆறு மாதங்களுக்குப் பின்னர் இயல்பான நிலைக்குத் திரும்பியதாம்.
இந்த சம்பவம் நீரிழிவு நோய் குறித்த ஆய்வுக்கான ஐரோப்பிய சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இந்த மாதம் விவாதிக்கப்படுகிறது.




























