நயோமி ஒசாகா: நிறவெறிக்கு எதிராக டென்னிஸ் உலகில் குரல் கொடுக்கும் ஒரு நட்சத்திரம்

நயோமி
படக்குறிப்பு, நயோமி
    • எழுதியவர், ஜோனாத்தன் ஜூரைகோ
    • பதவி, பிபிசி ஸ்போர்ட்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தது தொடர்பாக நடைபெற்ற போராட்டம் இன்ஸ்டாகிராமில் பதியப்பட்டபோது நயோமி ஒசாகா தனது குரல் கேட்கப்படுவதை அறியத் தொடங்கினார்.

ஜார்ஜ் பிளாய்டிற்கான போரட்டத்தில், தனது காதலரான கோர்டேவுடன் இணைந்து மின்னியாபோலிஸ் போராட்டத்திற்கு சென்றார் ஓசாகா.

”எனது இதயம் வலிக்கிறது. இது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம். பொறுத்தது போதும்” என பத்திரிகை ஒன்றிற்கு தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டார் நயோமி.

நயோமிக்கு 22 வயதாகிறது. உலகின் திறமைசாலியான ஒரு டென்னிஸ் வீரரான அவர் பொதுவாக தன்னுடைய விஷயத்தை பற்றி அமைதியாகவும், எப்போதும் பிரபலமடைவதில் அவ்வளவு அலட்டிக்கொள்ளாமலும் இருப்பார்.

மென்மையாக பேசும் ஜப்பானிய வீரரான அவர், தன்னை டென்னிஸில் "மிகவும் விசித்திரமான நபர்" என்று அழைத்துக்கொள்கிறார்.

2018ல் ’இந்தியன் வெல்ஸ்’ பட்டத்தை வென்ற பிறகு அவர் ஆற்றிய உரை ”மிகவும் மோசமான” ஒன்று என அவரே கூறிகொள்வார்.

பெரும்பாலான பார்வையாளர்கள் அந்த பேச்சு ஒரு அருமையான, நகைச்சுவையான மற்றும் தனக்கு தானே பேசிக்கொள்ளும் வகையில் இருந்த மிகச் சிறந்த ஒன்று என்கின்றனர் - ஆனால் ஒசாகா பெரிய கூட்டங்களுக்கு முன்னால் பேசுவதை அதிகம் விரும்புவதில்லை..

செய்தியாளர்கள் சந்திப்பில், அவரின் விடை சுருக்கமானதாகவே இருக்கும் அவ்வப்போது போக்கிமான் குறித்து பேசுவார். தனது இருக்கையிலிருந்து மாறி உட்கார்ந்து கொண்டு பேசுவார்.

ஆனால் இதற்காகவெல்லாம் அவரின் மனதின் குரல் வலுவற்றது என கூற இயலாது. சனிக்கிழமையன்று இரண்டாவது முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றார்., மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்றிருக்கிறார்.

ஆனால் இந்த உலகம் அவரின் குரலை இப்போதுதான் கேட்க விரும்புகிறது என்று கூறலாம்.

ஒசாக்காவின் அன்னை தமாகி ஒரு ஜப்பானியர், அவரது தந்தை லியனர்ட், கரீபிய நாடான ஹைட்டியை சேர்ந்தவர். மூன்று வயதாக இருந்தபோது நியூயார்க்கிற்கு அவரின் குடும்பம் இடம் பெயர்ந்தது.

நயோமி
படக்குறிப்பு, நயோமி

’நான் நானாக இருக்கிறேன்’

”நான் ஒரு மகள், சகோதரி, தோழி, ஒரு காதலி. ஆசியாவை சேர்ந்தவள். கருப்பினத்தவள், நான் ஒரு பெண். எந்த ஒரு 22 வயது பெண்ணை போன்றுதான் நானும். நான் டென்னிஸில் சிறந்து விளங்குகிறேன் அவ்வளவுதான். நான் எப்படி இருக்கிறேனோ அவ்வாறே என்னை ஏற்றுக் கொண்டேன்.” என தனது கட்டுரையில் நயோமி தெரிவித்துள்ளார்.

இதில் சமீபத்திய நாட்களில் அவருக்கு மற்றொரு பெயரும் சேர்ந்துள்ளது. அதுதான் ஆர்வலர் என்ற பட்டம்.

. யுஎஸ் ஓபனுக்கு முன்னதாக, விஸ்கான்சினில் காவல்துறையினரால் ஜேக்கப் பிளேக் என்ற கறுப்பின மனிதரை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒசாகா தனது வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் ஓபன் அரையிறுதி போட்டியின் போது வெளியேறினார்.

அவரது நடவடிக்கை மற்றும் அமெரிக்க விளையாட்டு நட்சத்திரங்களின் மற்ற எதிர்ப்புகளுடன் சேர்ந்து, முழு போட்டிகளையும் அன்றைய தினம் நிறுத்தி வைக்க தூண்டியது.

"நான் ஒரு விளையாட்டு வீரர் ஆவதற்கு முன்பு, நான் ஒரு கருப்பின பெண்" என்று ஒசாகா கூறினார்.

ஒரு கருப்பு பெண்ணாக நான் டென்னிஸ் விளையாடுவதைப் பார்ப்பதை விட, உடனடி கவனம் தேவைப்படும் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளதாக நான் உணர்கிறேன் என்றார்.

போட்டி தொடங்கிய மறுநாள் ஒசாக்கா விளையாட முடிவு செய்தார். அவர் "பின்தொடர்பவர் அதிகம்" என்று அவர் கூறும்போது, ​​அவரது நடவடிக்கைகள் தீர்க்கமானதாக மற்றும் கட்டளையிடுபவையாக இருந்தன.

"நான் காத்திருந்தேன், காத்திருந்தேன், பின்னர் நான் தான் முதல் அடியெடுத்து வைக்க போகிறேன் என்பதை உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.

"நான் டென்னிஸ் உலகில் விழிப்புணர்வை உருவாக்க விரும்பினேன், நான் என் வேலையைச் செய்தேன் என்று நினைக்கிறேன்,." விளையாட்டின் மிகப்பெரிய போட்டியான - ஒரு கிராண்ட்ஸ்லாம் நிகழ்வில், இன அநீதி மற்றும் காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிரான அவரது போராட்டம் தொடர்ந்தது.

ஒவ்வொரு யுஎஸ் ஓபன் போட்டிக்கும் முன்னும் பின்னும் அவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க நபரின் பெயரைக் கொண்ட முகமூடியை அணிந்திருந்தார்.

பிரோனா டெய்லர். எலியா மெக்லைன். அஹ்மத் ஆர்பெரி. ட்ரைவோன் மார்ட்டின். ஜார்ஜ் ஃபிலாய்ட். பிலாண்டோ காஸ்டில். தமீர் ரைஸ்.

சனிக்கிழமை இறுதிப் போட்டிக்கு முன்னர் அவர் வென்ற ஒவ்வொரு போட்டியும் ஒரு பெயரைக் காண்பிப்பதற்கு வாய்ப்பளித்தது. அவரது பயிற்சியாளர் விம் ஃபிசெட், இது வெற்றிபெற கூடுதல் ஊக்கத்தை அளித்ததாகக் கூறினார். "இது நிச்சயமாக அவளுக்கு உதவுவதோடு அவருக்கு அதிக ஆற்றலையும் தருகிறது" என்று கூறினார்.

நயோமி
படக்குறிப்பு, நயோமி

தாக்கத்தை ஏற்படுத்திய தொடர்

"போட்டிக்கு வெளியே ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறார், மேலும் போட்டியின் போதும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். இது ஒரு நல்ல கலவையாகும்." அமெரிக்க ஜெர்மைன் ஜென்கின்ஸுக்குப் பதிலாக டிசம்பரில் பிசெட்டே ஒசாகாவின் பயிற்சியாளராக ஆனார். கடந்த கோடை காலத்தில் ஒசாகா, ஜென்கின்ஸ் மற்றும் அவரது அணியினர் புல்தரை போட்டிகளுக்காக இங்கிலாந்தில் இருந்தனர் மற்றும் பர்மிங்காமில் நடைபெற உள்ள பெண்கள் டென்னிஸ் அசோசியேஷன் போட்டிக்கு தயாராகி வந்தனர்.

இருவரும் சேர்ந்து, நெட்ஃபிளிக்ஸில் ’வென் தே சி அஸ்’ என்ற தொடரைப் பார்த்தார்கள்.

நியூயார்க்கின் மத்திய பூங்காவில் ஒரு மிருகத்தனமான பாலியல் தாக்குதல் நடத்தியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட ஹார்லெமைச் சேர்ந்த ஐந்து கறுப்பின, ஆண் இளைஞர்களின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது அந்த தொடர்.

ஒசாக்கா தனது குரலை அதிகமாகப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்த ஒரு முக்கியமான தருணம் அது என்று ஜென்கின்ஸ் நம்புகிறார்.

"அமெரிக்காவின் கறுப்பின மனிதர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதில் நவோமிக்கும் அனைவருக்கும் வித்தியாசமான பார்வையும் கண்ணோட்டமும் கிடைத்ததாக நான் உணர்கிறேன்" என்று அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் இப்போதைய தேசிய பயிற்சியாளர் கூறுகிறார்.

"அவளுடைய இதயத்தை உண்மையில் தொட்டதாக நான் உணர்கிறேன். யாரும் அழாமல் அதைப் பார்க்க முடியாது. அது அவருக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது, நாங்கள் அதைப் பற்றி விவாதித்தோம், அதைப் பற்றி உரையாடினோம், அவள் வெளியே வந்து அவராகவே அதற்காக குரல் கொடுப்பதை பார்க்க எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

"அவர் தன்னை தயார்படுத்திக்கொள்ளாத முதிர்ச்சியற்ற நிலையில் அவளைச் சந்தித்தேன், அவர் வெளியே வந்து குரல் கொடுத்தார். அவர் அந்தத் துறையில் இன்னும் முதிர்ச்சியடைவதை நீங்கள் பார்க்கலாம். இப்போது அடுத்த கட்டத்தில் அவர் இருப்பதாக நான் உணர்கிறேன்.

"அமெரிக்காவில் ஒரு கறுப்பின மனிதனர்களுக்கு அது அதிகாரம் அளிக்கிறது, மேலும் அவர் முன்னேறுகிறார், கடும் சிக்கலை எதிர்கொள்கிறார். என் கருத்துப்படி, எது சரி என்று அவர் எழுந்து நிற்பதாக எனக்குத் தோன்றுகிறது. இது இப்போது அவளுடைய களம். "அவள் அதை செய்ய வேண்டியதில்லை, அவள் எளிதாக அமைதியாக இருந்துவிட முடியும்.

." உலகின் மிகப்பெரிய விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான ஒசாக்கா தனது போட்டியை, ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவருடைய சக வீரர்களும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்.

கிரீஸை சேர்ந்த, தரவரிசை பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ள ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ், அமெரிக்க ஓபன் போட்டியின் போது “ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்” என்ற சட்டையை அணிந்திருந்தார். மேலும் தனது தோழியான ஒசாகா குறித்து அவர் பெருமையாக உணருவதாக தெரிவித்தார். ஒசாகா நிறவாதம் குறித்து பல கேள்வி எழுப்புவதில் தனது பெருமையாக உள்ளது என்று அவர் கோரினார்.

தான் வெஸ்டர்ன் மற்றும் சதன் ஓபன் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என ஒசாகா தெரிவித்ததற்கு காரணம், வெள்ளை நிறத்தவர் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு இடத்தில் கருப்பினத்தவர்கள் குறித்த உரையாடல்கள் தொடங்க வேண்டும் என்பதே என்று தெரிவித்திருந்தார்.

டென்னிஸ் விளையாட்டுக்கு உட்பட்ட பலருக்கு கருப்பினத்தவர்களின் வலி குறித்த புரிதல் இருப்பதில்லை என அவர் தெரிவித்தார்.

கருப்பினத்தவர் ஒருவர் டென்னிஸ் விளையாட்டில் சாதித்தாலும், அவர் தனித்திவிடப்பட்டதாகவே உணருகிறார் என்கிறார் ஜென்கின்ஸ்.

அமெரிக்க ஓபனில் 16 இடத்தை பிடித்திருந்த அமெரிக்க வீரரான டியாஃபோ, நிற வெறி குறித்து பேச ஒசாகா தனது துறையை பயன்படுத்துவது சிறப்பான ஒன்று என தெரிவித்துள்ளார்.

பெருமையின் சின்னம்

”நிறைய பேர் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் அவர் தன்னால் செய்ய முடியும் என நம்பினார். ஒவ்வொரு இரவும் அவர் வேறு வேறு மாஸ்குடன் வருகிறார்.” என்கிறார் டியாஃபோ.

”நான் அவர் குறித்து பெருமையடைகிறேன்.”

ஒசாகாவின் ஜப்பான், ஹைட்டி, அமெரிக்க பின்புலத்தால் அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு.

தனது கட்டுரையில் ஜப்பானில் நிறவெறியை சமாளிப்பது “சவான ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார்.

நயோமி

ஒசாகா பெரும்பாலும் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நிறவெறிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார். சமூக அநீதி குறித்து உலகிற்கு வெளிச்சம் காட்ட அவர் டென்னிஸை கருவியாக பயன்படுத்த முடியும் என நம்புகிறார்.

”டென்னிஸ் என்பது ஒரு சர்வதேச நிகழ்ச்சி; உலக முழுவதும் உள்ள பல்வேறு நபர்களால் அது விளையாடப்படுகிறது.” என ஒசாகா தெரிவிக்கிறார்.

ஒரு விளையாட்டு வீரர் இதுகுறித்து பேசினால், அனைவரும் இதுகுறித்து பேச தொடங்குவர் என நான் நம்புகிறேன் என்கிறார் ஒசாகா.

செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், ஜேகோவிச் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோ ஓய்வை நோக்கியுள்ளனர். எனவே டென்னிஸில் புதிய இளம் நட்சத்திரங்கள் வரும் காலமிது.

கடந்த வருடம் ஒரு தலைவராகவும், நம்பர் இடத்திலும் இருக்கும் அழுத்தத்தை சமாளிக்க ஒசாகா தடுமாறினார்.

ஃப்ரென்ஞ் ஓபன் போட்டியின் மூன்றாவது சுற்றில் தோல்வியுற்ற பிறகு “அது ஒரு நல்ல விஷயம்” என்றே அவர் கருதினார். நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் வரும் அழுத்தத்தால் அவருக்கு பெரும் மன அழுத்தத்தில் இருந்தார்.

ஆனால் தற்போது நடைபெற்ற அமெரிக்க ஓபன் போட்டியில் ஒசாகா தனது முதிர்ச்சியை வெளிக்காட்டினார். அவரின் கொள்கையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அவரின் விளையாட்டை அவர் நம்பினார் வெற்றியும் பெற்றார்.

ஏற்கனவே நட்சத்திர வீரராக இருந்தாலும், வயதாகும் வீரர்களின் இயல்பான வாரிசாக ஒசாகாஅ மாறி வருகிறார். அவர் டென்னிஸில் சிறந்து விளங்குவது குறித்து ஏற்கனவே புகழ்பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரின் செய்கையால் அவர் ஒரு தலைவராக உருமாறி வருகிறார். அனைவருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்.

டென்னிஸ் விளையாட்டின் எதிர்காலம் என புகழாரம் சூட்டுகிறார் ஜென்கின்ஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: