லக்ஷயா சென் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தோல்வி

பட மூலாதாரம், Getty Images
இன்று நடைபெற்ற ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் டென்மார்க் வீரர் விக்டோர் அக்செல்சனிடம் தோல்வியுற்றார்.
பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியஷிப் போட்டியில் இன்று இந்திய வீரர் லக்சயா சென்னும் டென்மார்க் வீரர் விக்டோர் அக்செல்செனும் களம் கண்டனர்.
இதில் இந்திய வீரர் லக்சயா சென்னை விக்டோர் 21 - 10, 21 - 15 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதில் வெற்றிப் பெற்றிருந்தால் இந்த தொடரில் வெற்றிப் பெறும் மூன்றாவது இந்தியர் என்ற சிறப்பை பெற்றிருப்பார் லக்சயா சென்.
ஆல் இங்கிலாந்து சாம்பியஷிப் போட்டியில் நுழைந்த நான்காவது இந்தியர்
சனிக்கிழமையன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மலேசியாவை சேர்ந்த லீ ஜீயை எதிர்கொண்டிருந்தார் லக்சயா சென். இறுதி போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நுழைந்திருக்கும் நான்காவது இந்தியர் இவர்.
இவருக்கு முன்னதாக இந்தியாவின் பிரகாஷ் நாத், பிரகாஷ் படுகோன், புல்லேலா கோபிசாந்த் ஆகிய மூவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.
படுகோன் மற்றும் கோபிசந்த் ஆகிய இருவர் மட்டுமே இந்த தொடரை வென்ற இந்தியர்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளனர். படுகோன் 1980ஆம் ஆண்டிலும் கோபிசந்த் 2001ஆம் ஆண்டிலும் இந்த வெற்றியைப் பெற்றனர்.
லக்சயா சென் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஆறு வருடமாகவே லக்சயா சென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதாவது அவர் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார்.
கடந்த ஜனவரியில் இந்திய ஓபன் போட்டியில் சிறப்பாக விளையாடி சூப்பர் 500 சாம்பியன் பட்டத்தை வென்றார்; கடந்த வாரம் நடைபெற்ற ஜெர்மன் ஓபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
உலகம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் மலேசியாவை சேர்ந்த லி ஷி ஜியாவை 21 - 13, 12 -21, 21 - 19 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
யார் இந்த லக்சயா சென்?

பட மூலாதாரம், Getty Images
லக்சயா சென் 2001 ஆம் ஆகஸ்டு 16ஆம் தேதி உத்தரகாண்டின் அல்மோரா என்ற இடத்தில் பிறந்தார்.
5.11 உயரம் கொண்ட அவர், புகழ்பெற்ற பேட்மிண்டன் பயிற்சியாளர்களான விமல் குமார், கோபிசந்த் மற்றும் யோங் சூ யூ ஆகியோரிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
பிரகாஷ் படுகோனின் பேட்மிண்டன் அகாதமியிலும் பயிற்சி பெற்றிருக்கிறார் லக்சயா சென்.
லக் சயா சென்னின் தந்தை டிகே சென்னும் ஒரு பேட்மிண்டன் வீரர் ஆவார். இவரும் லக்சயா சென்னுக்கு பயிற்சி அளிப்பார். லக்சயா சென்னின் சகோதரரும் சர்வதேச அளவில் விளையாடும் ஒரு பேட்மிண்டன் வீரர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
































