கிரிக்கெட் : ஷேன் ஷில்லிங்ஃபோர்டுக்கு இடைக்காலத் தடை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர், ஷேண் ஷில்லிங்ஃபோர்டுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்- ஐசிசி தறகாலிகத் தடை விதித்துள்ளது.
அவரது பந்துவீசும் தன்மை குறித்து, சுயாதீனமான ஒரு குழு உடலியக்க ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த ஆய்வில் அவரது பந்துவீசும் முறை சட்டவிரோதமான வகையில் இருந்தது கண்டறியப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
சுயாதீனமான இந்த ஆய்வை அடுத்தே அவர் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தற்காலிகத் தடை விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐ சி சி தெரிவித்துள்ளது.
ஷேண் ஷில்லிங்க்ஃபோர்டிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர் சாதாரணமாக வீசும் ஆஃப் பிரேக் மற்றும் தூஸ்ரா ஆகிய இரண்டு வகை பந்து வீச்சின் போதும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அவரது கை 15 டிகிரி கூடுதலாக நீண்டது என்று கண்டறியப்பட்டதாக ஐ சி சி யின் அறிக்கை கூறுகிறது.
அவர் தன்னை மீண்டும் ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தி, அதில் அவரது பந்துவீச்சு முறை சரியாக உள்ளது என்று கண்டறியப்படும்வரை இந்தத் தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டூல்கர் மும்பையில் விளையாடிய தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போதே ஷேண் ஷில்லிங்ஃபோர்டின் பந்துவீச்சில் குறைபாடுகள் இருப்பதாக களநடுவர்கள் தெரிவித்ததை அடுத்தே அவர் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

























