முடிவில்லாமல் முடிந்த பிரேசில்- மெக்ஸிகோ போட்டி.

பட மூலாதாரம், Getty
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பரபரப்பாக நடைபெற்ற பிரேசில்-மெக்ஸிகோ அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
இரு அணிகளுக்கும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் இருந்தும், கடுமையான போட்டி காரனமாக இருவராலும் கோல் அடிக்க முடியவில்லை.
பிரேசில்-மெக்ஸிகோ இரு அணிகளுமே தமது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்தப் ஆட்டம் இரு நாடுகளிலும் பெரும் எதிரபார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பட மூலாதாரம், Reuters
ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனினும் உளவியல் ரீதியில் இந்த ஆட்டம் மெக்ஸிகோவுக்கு வெற்றி என பிபிசியின் வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக ஆட்டத்தின் இரண்டாம் பகுதியின் கடைசி நிமிடங்களில் பிரேசில் அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை அவர்களால் கோலாக மாற்ற முடியவில்லை

























