மேற்கிந்திய தீவுகள்- இந்திய கிரிக்கெட் உறவுகளின் எதிர்காலம்?
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனை மேலும் தீவிரமடைகின்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர்கள், இந்தியாவில் நடந்துவந்த போட்டித் தொடரின் இடைநடுவில் விலகிக்கொண்டு நாடு திரும்பிவிட்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து ஒருநாள் ஆட்டங்கள், ஒரு இருபது- ஓவர் ஆட்டம், மூன்று டெஸ்ட் ஆட்டங்களை விளையாடுவதற்காக இந்தியா சென்றிருந்தது.
எனினும், கடந்த அக்டோபர் 17ம் திகதி நடந்த நாலாவது ஒருநாள் ஆட்டத்தின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைவிட்டுச் சென்றது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சனை காரணமாகவே அந்த அணி வீரர்கள் இந்தியத் தொடரைக் கைவிட்டுச் சென்றனர்.
இதனால், இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியை உதவிக்கு அழைத்திருந்தது. இலங்கை அணி வீரர்கள் அவசர உதவியாக இந்தியாவில் தற்போது 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிவருகின்றனர்.
எனினும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்துக்கு இழப்பீடாக 42 மில்லியன் டாலர்களை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தக் கோரிக்கை இருநாட்டு கிரிக்கெட் உறவுகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றியும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவுக்கு உள்ள ஆதிக்கம் பற்றியும் இந்தியாவின் பிடிஐ ஊடகத்தின் விளையாட்டுத்துறை செய்தியாசிரியர் ஈஷ்வர் ராமச்சந்திரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.