உலகக் கோப்பை: நியுசிலாந்து, இந்திய அணிகள் முன்னிலையில்

பட மூலாதாரம், Getty
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரையான நிலவரங்களின்படி, புள்ளிகள் பட்டியலில் ஏ-பிரிவில் 8 புள்ளிகளுடன் நியுசிலாந்து அணியும் பி- பிரிவில் 6 புள்ளிகளுடன் இந்தியாவும் முதலிடங்களில் உள்ளன.
ஏ- பிரிவில் உள்ள இலங்கை அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் ஆஸ்திரேலிய அணி வங்கதேச அணிக்கும் கீழே நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பி- பிரிவில் தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நியுசிலாந்தின் ஆக்லண்டில் நடைபெற்ற ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து அணி ஒரு விக்கட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் சரித்திரத்தில் நியூசிலாந்துடனான இந்த ஆட்டம் மிகப் பெரிய சவாலாக அமைந்தது.
நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்களான பிராட் ஹாடின் 43 ஓட்டங்களையும் டேவிட் வார்னர் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சார்பாக ஏந்தவொரு வீரர்களும் அரைச் சதத்தை கூட பெறமுடியவில்லை.
32.2 ஓவர்களில் 151 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர்.
நியுசிலாந்தின் மார்ட்டின் 11 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். மெக்கலம் 24 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு வலுச் சேர்த்தார். கோரே ஆண்டர்சன் 26 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் குவித்தனர்.
நியுசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 என்ற வெற்றி இலக்கை எட்டியது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் யு.ஏ.இ அணியை எதிர்த்தாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்புக்கு 104 ஓட்டங்களை குவித்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
யு.ஏ.இ அணி 31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களையே குவித்திருந்தது.




























