ஷேன் வாட்ஸன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ஷேன் வாட்ஸன்
படக்குறிப்பு, ஷேன் வாட்ஸன்
பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷேன் வாட்ஸன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஜுலையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சோபிக்கத் தவறியதால் அவர் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

சனிக்கிழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றின்போது, கெண்டைக்காலில் ஏற்பட்ட காயத்தாலும் வாட்ஸன் அந்தத் தொடரிலிருந்து விலக நேரிட்டது.

செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸன், அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான தருணம் இதுதான் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஷேன் வாட்ஸன் இதுவரை விளையாடியுள்ள 59 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் அடங்கலாக 3700க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 75 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.