ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வங்கதேசப் பயணத்தில் தாமதம்

பிரசுரிக்கப்பட்டது

பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்கதேசத்திற்கான தமது பயணத்தை தாமதப்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்க தேசத்திற்கான பயணத்தை ஒத்திவைத்துள்ளது ஆஸ்திரேலியா.
படக்குறிப்பு, பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்க தேசத்திற்கான பயணத்தை ஒத்திவைத்துள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணி ஆட உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதலாவது போட்டி அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இதற்கான பயிற்சிப் போட்டிகள் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பமாக இருந்ததால், ஆஸி. அணியினர் திங்கட்கிழமை அங்கு செல்லவிருந்தனர்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை இனம் கண்டிருப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மாற்றப்பட்ட புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.