பிரெஞ்சு ஒப்பன் சாம்பியனானார் ஜோக்கோவிச்

பிரசுரிக்கப்பட்டது

பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் இறுதிப்போட்டியில் வென்றார். இந்த பிரஞ்சு ஒப்பன் சாம்பியன் பட்டத்தைத்தான் ஜோக்கோவிச் இதுவரை பெறாமல் இருந்தார்.

சற்று முன்னர் முடிந்த இந்த இறுதிப்போட்டியில், அவர் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் ஆண்டி மர்ரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்றார்.

மர்ரியும் இந்தப் போட்டியில் 1937லிருந்து இறுதிச் சுற்றுக்கு வந்த முதல் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறார்.

இந்தப் போட்டியின் முதல் செட்டில் ஆண்டி மர்ரி வென்றாலும் தொடர்ந்து ஜோக்கோவிச் மூன்று செட்களை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.