சம்பிக்க ரணவக்கவின் எச்சரிக்கை பற்றி கருணாநிதி கடிதம்

திமுக தலைவர் கருணாநிதி
படக்குறிப்பு, திமுக தலைவர் கருணாநிதி
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 'மேலும் பல முள்ளிவாய்க்கால்களுக்கு வழி செய்யவேண்டாமென' இலங்கைத் தமிழர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக வந்துள்ள செய்திகள் குறித்து கவலை தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஃபாக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

'மற்றவர்களை சீண்டும் வகையில் அவ்வாறு எவரும் பேசுவதைத் தவிர்க்கவேண்டும், மனிதாபிமானத்துடனேயே தமிழர் பிரச்சினையினை அணுகவேண்டுமென இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் சொல்லவேண்டுமென கருணாநிதியின் கடிதம் வலியுறுத்துகிறது.

தவிரவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கண்டனத்திற்குரிய கருத்துக்கள் குறித்தும், இலங்கை அரசின் அணுகுமுறை குறித்தும் ஐ.நாவிற்கும் இந்தியா எடுத்துரைக்கவேண்டுமெனவும் திமுக தலைவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும்போக்கு தேசியவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சரே சம்பிக்க ரணவக்க என்பது குறிப்பிடத்தக்கது.