யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகியும்....

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்றன. இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் சொந்தக் காணிகளுக்குச் செல்ல முடியாதிருப்பது போன்ற பிரச்சினைகள் இன்னமும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. இறுதி யுத்தத்தின்போதும், யுத்தத்திற்கு முன்னரும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்ட பின்பும் காணாமல் போயுள்ளவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்படாத பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்த கையோடு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியை நம்பி இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பெருமளவானோருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் குடும்ப உறவினர்கள் கவலையடைந்திருக்கின்றார்கள். இந்த நிலைமைகள் குறித்த பெட்டகங்களை இங்கு கேட்கலாம். தயாரித்து வழங்கியவர் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம்.