லஞ்ச ஆணைக்குழுவின் முன்பாக வருமாறு ராஜபக்ஷவுக்கு அழைப்பு

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த வார பிற்பகுதியில் இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஆணைக்குழுவின் முன்பாக வருமாறு ராஜபக்ஷவுக்கு அழைப்பு
படக்குறிப்பு, லஞ்ச ஆணைக்குழுவின் முன்பாக வருமாறு ராஜபக்ஷவுக்கு அழைப்பு

ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரை தனது கட்சிக்கு மாறுமாறு கோரி, அவருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்று ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அந்த தேர்தலில் அவர் தனது முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.

ஆனால், ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு அழைத்ததை எதிர்த்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.