இலங்கை மலையகம்: அதிருப்தியும் ஆர்வமும்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மலையகத்தில் வசிக்கும் தமிழர்கள் அரசியல்வாதிகள் மீதும் அதிருப்தியையும் சீற்றத்தையும் கொண்டிருக்கிறார்கள். சரியானவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்ற ஆர்வமும் காணப்படுகிறது.
வீட்டுப் பிரச்சினை, காணிப் பிரச்சினை என்பவற்றோடு சம்பளப் பிரச்சினைக்கும் சமீபகாலமாக முகம்கொடுத்துவரும் மலையகத் தமிழர்கள், இந்தப் பொதுத் தேர்தலில் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அரசியல்வாதிகள் மீது அதிருப்தி இருந்தாலும் வாக்களிக்க வேண்டும் என்பதிலும் சரியானவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வமாகக் காணப்படுகின்றனர்.
இது குறித்து பிபிசி தமிழோசையின் செய்தியாளர் மாணிக்கவாசகம் தயாரித்து அளித்திருக்கும் பெட்டகம்.