தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 14 இடங்களை வென்றிருந்தது.
தற்போதைய தேர்தலில் அது மொத்தமாக 16 இடங்களை வென்றிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,
யாழ். தேர்தல் மாவட்டத்தில் 5 இடங்களும்,
வன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்,
அம்பாறை மாவட்டத்தில் 1 இடமும்
திருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது
ஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றுள்ளது.
இந்த பதினான்கு இடங்களில் வெற்றி பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள்.
1. இரா சம்பந்தர்
2. சிவஞானம் சிறிதரன்
3. மாவை சேனாதிராஜா
4. எம் ஏ சுமந்திரன்
5. தர்மலிங்கம் சித்தார்த்தன்
6. ஈ சரவணபவன்
7. ஞா. சிறிநேசன்
8. எஸ்.வியாளேந்திரன்
9. எஸ். யோகேஸ்வரன்
10. கவீந்திரன் கோடீஸ்வரன்
11. செல்வம் அடைக்கலநாதன்
12. சிவசக்தி ஆனந்தன்
13. சி. சிவமோகன்
14. சார்ல்ஸ்
இந்த பதினான்கு பேரைத்தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தேசியப்பட்டியலில் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. அந்த இரண்டு இடங்களுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாங்கிய ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இந்தத் தேர்தலில் அதிகரித்திருப்பதாகவே இதுவரையிலான தேர்தல் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டு அளவுகோள்களின் கீழும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமான தனது ஆதரவை தக்கவைத்துக்கொண்டது மட்டுமல்ல, அதிகரித்திருப்பதாகவுமே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.





























