எக்னெலிகொட கடத்தல்:மேலும் 4 இராணுவத்தினர் கைது

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேரை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர பிபிசியடம் தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல் குறித்து தொடர்ந்தும் கேள்விகள்
படக்குறிப்பு, பிரகீத் கடத்தல் குறித்து தொடர்ந்தும் கேள்விகள்

இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டடிருந்த நிலையிலேயே, இன்று நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

திங்கட்கிழமை கைது செய்யப்பட்டவர்களில் இருவர் லெப்டினன் கர்ணல்கள் எனவும், ஒருவர் சார்ஜன்ட் மற்றவர் கார்ப்பரல் எனவும் அவர் கூறினார்.

காவல் துணை தலைவரின் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவத்தார்.

முன்னர் கைது செய்யப்பட்டிருந்த மூவரில் இருவர் இராணுவத்தைச் சேர்ந்தவரகள், ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனவும் அவர் கூறினார்.