'முன்னேஸ்வரம் கோயில் மிருகபலி பூஜைக்கு இந்த ஆண்டும் அனுமதி இல்லை'

மிருகபலி பூஜைக்கு பௌத்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
படக்குறிப்பு, மிருகபலி பூஜைக்கு பௌத்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் மிருகபலி பூஜையை நடத்துவதில் இம்முறையும் தடை ஏற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் நான்கு ஆண்டுகளாக இந்த மிருகபலி பூஜையை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த மிருகபலி பூஜையை நடத்தக்கூடாது என்று பிரதேசசபை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கோயிலை ஒட்டிய பகுதியில் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கோயிலின் தலைமைக் குருக்கள் காளிமுத்து சிவபாதசுந்தரம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

2011-ம் ஆண்டில் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரின் கடுமையான எதிர்ப்புக்கு நடுவே மிருகபலி பூஜை இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

2012-ம் ஆண்டிலும் பௌத்த அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதால் மிருகபலி பூஜை கைவிடப்பட்டது.

மிருகபலி பௌத்த நெறிமுறைகளுக்கு எதிரானது என்று பௌத்த அமைப்புகள் கூறிவருகி்ன்றன.

இந்தப் பிரச்சனையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, பிரதேசசபையின் அனுமதியுடன் பலி பூஜைகளை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இம்முறையும் பிரதேசபை அனுமதியை மறுத்துவிட்டதாக கோயிலின் தலைமைக் குருக்கள் தெரிவித்தார்.