இலங்கை மலையக தொழிற்சங்கத் தலைவர் வேலாயுதம் காலமானார்

இலங்கையில் மூத்த மலையக தொழிற்சங்கத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே. வேலாயுதம் தனது 65வது வயதில் செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் காலமானார்.
கடந்த சில சில மாதங்களாக உடல நலம் பாதிப்புக்குள்ளான இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான இவர் ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் சில காலம் இருந்துள்ளார்
ஊவா மாகாண சபையிலும் 15 வருடங்களுக்கு மேலாக உறுப்பினர்' பதவி வகித்த கே. வேலாயுதம் 2001ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கும் தெரிவாகியிருந்தார்
இறுதியாக ஐ. தே. கட்சி தேசிய பட்டியல் வழியாக 2014 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருந்த இவர் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான அமைச்சரவை மாற்றத்தின் போது பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத நிலையில் இவரது பெயர் ஐ.தே. கட்சி தேசிய பட்டியலில் முன் மொழியப்பட்டிருந்தபோதிலும் தேர்தலுக்கு பின்னர் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

























