பாரிஸ் தாக்குதல்:அவசர நிலையை நீட்டிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றத் தாக்குதல்களை அடுத்து அமலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க நாடாளுமன்றம் கோரப்பட்டுள்ளது.

தீவிரவாத்தை எதிர்க்க அரசியல் சாசனத்தின் மாறுதல் தேவை என பிரெஞ்ச் அதிபர் கோரியுள்ளார்
படக்குறிப்பு, தீவிரவாத்தை எதிர்க்க அரசியல் சாசனத்தின் மாறுதல் தேவை என பிரெஞ்ச் அதிபர் கோரியுள்ளார்

மிகவும் அபூர்வமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ஒலாந்(த்), பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட நாட்டின் அரசியல் சாசனத்தில் மாறுதலை ஏற்படுத்தும் தேவை வரலாம் எனக் கூறியுள்ளார்.

இத்தாக்குதல்கள் சிரியாவில் திட்டமிட்டு முடிவாகி, பெல்ஜியத்திலிருந்து நடத்தப்பட்டன எனவும் பிரெஞ்ச் அதிபர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இதுவரை இல்லாத வகையில், சிரியா மிகப்பெரிய பயங்கரவாதத் தொழிற்சாலையாகத் திகழ்கிறது என வர்ணித்துள்ள ஒலாந்(த்), இதற்கு எதிராக ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கை தேவை எனவும் கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் அமெரிக்க மற்றும் ரஷ்யத் தலைவர்களை தான் சந்திக்கவுள்ளதாகவும் பிரெஞ்ச் அதிபர் தெரிவித்துள்ளார்.