இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜுன் மகேந்திரனை நியமிக்க தடை கோரி வழக்கு

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜுன் மகேந்திரன் மீண்டும் நியமிப்பதைத் தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேல் முறையீடு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன்
படக்குறிப்பு, அர்ஜுன் மகேந்திரன்

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் கபே அமைப்பு, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதியாக இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரன் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை மத்திய வங்கியின் தலைவராக அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மனுதாரர் தற்போது அவர் மீது பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளதாக அறிவித்தனர்.

அர்ஜுன் மகேந்திரனை மீண்டும் மத்திய வங்கியின் தலைவராக நியமிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கபே அமைப்பு, இவ்வாறு நியமிக்கப்பட்டால் இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்துள்ளது.

எனவே, இது தொடர்பான நியமனத்தை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனு முலம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.