பிபிசி தமிழில் இன்று... 6 மணி வரை
பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், RESHAM KHAN/TWITTER
கடந்த ஜூன் மதம் ஆஸிட் வீச்சுக்கு உள்ளான ரெஷாம் கான், தான் குணமாகி வருகின்ற புகைப்படங்களை முதல்முறையாக ஈத் பெருவிழாவை கொண்டாடுவதற்கு பகிர்ந்துள்ளார்.


வேலூரில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கும், உயர் சிறப்புப் படிப்புகளுக்கும் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. தாங்கள் நடத்தும் எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் மாணவர் சேர்க்கைக்கு மிக அவசியம் என்கிறது அந்த மருத்துவக் கல்லூரி.
செய்தியை படிக்க:வேலூர் சிஎம்சியில் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது ஏன்?


பட மூலாதாரம், iStock
மும்பையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான 13 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
செய்தியை படிக்க: 13 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி


இந்தியாவின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் 53 ஆம் நாளான இன்று புதன்கிழமை விவசாயி ஒருவரை பிணத்தைப் போல படுக்க வைத்து, ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
செய்தியை படிக்க:தமிழக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்


மணல் இல்லாமல் காங்கிரீட் இல்லை. கட்டுமானத் துறையின் பெரும்பசிக்கு தீனிபோடுவதற்காக ஆஃப்ரிக்காவில் உள்ள நதிப்படுகைகள் தோண்டப்படுகின்றன. நதிகளும், ஆரோக்கியமாக இருந்தால் தான் அதை சார்ந்திருப்பவர்களும் வாழமுடியும். இதுபற்றி கென்யாவைச் சேர்ந்த ஹரியெட் கான்ஸ்டபிள் அலசுகிறார்.
செய்தியை படிக்க:கென்யா: ஆறுகளின் மரணத்திற்குக் காரணமாகும் மணல் தேவை


உங்கள் மூளையை தயார்ப்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!வாழ்த்துக்கள்!
செய்தியை படிக்க:முக்கோணத்தின் உள்ளே வரும் எண்ணை கண்டுபிடியுங்கள்?! புதிர் - 12
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
































