பிபிசி தமிழில் 6 மணி வரை இன்று

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் மதியம் 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

மாடலாக மாறிய மூத்த குடிமக்கள்:

லட்சுமி

சிறிய கறுத்த முகம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் கலைந்த தலைமுடி, ஒல்லியான தேகம், முகம் முழுவதும் வறுமை வரைந்த கோடுகள், கண்களில் நீங்காத அன்பும் ஏக்கமும் தெரியும் 71 வயது டில்லிபாபு ஒரு மாடல்.

Presentational grey line

கதராடைகளை மக்கள் வாங்குவது தள்ளுபடிக்காகவா? தரத்திற்காகாகவா?

கதராடை

காதி விற்பனையகங்களில், கதர் ஆடைகள் விற்பனை 90% வரை அதிகரித்திருப்பதாக கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதி "மனதின் குரல்" என்ற வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

Presentational grey line

டெல்லியை 'விஷவாயு கூண்டு` போல மாற்றிய நச்சுப்புகை!:

மக்கள் முகமூடி அணிந்துகொள்ள மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புகைமூட்டத்துடன் கூடிய குளிர் வானிலை மிகப் பெரியதொரு ஆபத்தை விடுப்பதாக மருத்துவர் சக்ஸேனா தெரிவிக்கிறார். ஆஸ்துமா மற்றும் தீவிர மூச்சுக்குழாய் அலற்சி உள்ளவர்களுக்கு, அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்கிறார் அவர்.

Presentational grey line

நடிகர்கள் அரசியல் தலைவர் ஆவதை எதிர்க்கிறாரா பிரகாஷ்ராஜ்?:

நடிகர் பிரகாஷ்ராஜ்
படக்குறிப்பு, நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர்கள் தங்களின் பிரபலத்தின் காரணமாக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. அது மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். அவர்களுக்கு, இந்த நாடு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து சரியான புரிதல் இருக்க வேண்டும் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும்.

Presentational grey line

ஹிட்லருடன் செல்ஃபி:

ஹிட்லருடன் செல்ஃபி: சிலையை நீக்கியது இந்தோனீசிய அருங்காட்சியகம்!

இந்தோனீசிய அருங்காட்சியகம் ஒன்றில் பார்வையாளர்கள் `செல்ஃபி` எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, ஆள் உயர ஹிட்லர் சிலை நீக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

கேட்டலோனியா தேர்தல்

ஸ்பெயின் பிரதமர்

கேட்டலோனியாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனது பாப்புலர் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேட்டலோனியா செல்ல உள்ளார்.

Presentational grey line

கிம் ஜாங் உன்-ஐ 'குள்ளமான, குண்டு' நபர் என்று அழைத்த டிரம்ப்:

டிரம்ப்

வட கொரியா உடனான அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் வார்த்தை போர் தொடர்கிறது. தன்னை முதியவர் எனக் கூறி வட கொரிய தலைவர் ஏன் அவமதிக்கிறார் என டிரம்ப் டிவிட்டரில் வியப்பாகக் கேட்டுள்ளார்.

Presentational grey line

செளதியில் உள்ள லெபனான் பிரதமரின் நிலை:

செளதி அரேபியாவின் மன்னருடன் லெபனான் பிரதமர் சாத் ஹரிரி

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு செளதியிடம் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கேட்டுள்ளார்.

Presentational grey line

சாகச மனி்தர்:

காணொளிக் குறிப்பு, ஜெட் எந்திர விசை அங்கியோடு பறந்து சாதனை படைத்த சாகச மனிதர்

ஜெட் எந்திர விசை அங்கியோடு பறந்து சாதனை படைத்த சாகச மனிதர் பற்றிய காணொளி.

Presentational grey line

சீனாவிடம் மன்றாடும் வட கொரியர்:

லீ

தன்னுடைய மனைவியையும், மகனையும் கட்டாயப்படுத்த நாடு கடத்த வேண்டாம் என்று வட கொரியர் ஒருவர் சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Presentational grey line

குஜராத் தேர்தல்: பாஜகவின் முன் உள்ள சவால்கள்:

மோதி

கட்சியின் பல மாவட்ட மற்றும் தாலுக்கா தலைவர்களும், இந்த தேர்தலில், ஊருக்குள் இறங்கி, சக கட்சி பணியாளர்களை ஊக்குவித்து பணியாற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியோடு திரும்பிச் சென்றனர்.

Presentational grey line

81 வயதில் பட்டாம்பூச்சி பிடிக்கும் முதியவர்:

காணொளிக் குறிப்பு, 81 வயதில் பட்டாம்பூச்சி பிடிக்கும் முதியவர் (காணொளி)

குழந்தை பருவத்தில் காப்பகத்தில் இழந்த வாழ்க்கையை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ள 81 வயது முதியவரை பற்றிய காணொளி.

Presentational grey line

ஜி.எஸ்.டி வரி குறைப்பு:

ஜி.எஸ்.டி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே டெல்லியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வியாபாரிகள். (கோப்பு படம்)

வரும் நவம்பர் 15 முதல் 200க்கும் அதிகமான பொருட்களின் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும் என்று வெள்ளியன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23-வது கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அவற்றில் 178 பொருட்கள் ஜி.எஸ்.டியின் அதிகபட்ச வரி விகிதமான 28%த்தில் இருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

கரும்புள்ளிகளின் அழகு:

கரும்புள்ளிகள்

சூரிய ஒளியின் யூ-வீ கதிர்களால், முகத்தில் உருவாகும் கரும்புள்ளிகளின் குவியல்களான 'ஃபிரிக்கல்கள்' எனக்கு உள்ளது குறித்து நான் எப்போதுமே கூடுதல் கவனமாக இருப்பேன்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :